Tuesday, October 21, 2014

கலாபவன் மணி தாக்கியதில் கமலஹாசனுக்கு மூச்சு திணறல், மருத்துவமனையில் அனுமதி

மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் என்ற திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கப்படுகிறது, இதில் கமலஹாசன், கெளதமி, கலாபவன் மணி உட்பட பலர் நடிக்கிறார்கள், இன்று கன்னியாகுமரியில் படப்பிடிப்பில் கலாபவன் மணி கமலஹாசனை தாக்குவது போல படப்பிடிப்பு நடைபெற்றது.

அப்போது கலாபவன் மணி தவறுதலாக கமலின் மூக்கில் குத்தியதில் கமல் உள்ளே வைத்திருந்த ரப்பர் குழாய் கமலின் மூச்சுக்குழல் உள்ளே சென்றுவிட்டது, இதனால் கமலுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது, 

இதையடுத்து கமல் உடனடியாக கன்னியாகுமரியில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார், ரப்பர் குழாய் எண்டோஸ் கோப்பி மூலம் அகற்றப்பட்டதையடுத்து அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment