Tuesday, October 21, 2014

தரவரிசைப் பட்டியலில் சாதனைப் படைத்த இந்திய வீரர்கள் !!

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர் புவனேஷ் குமார் தனது கணக்கில் புதிய சாதனை படைத்து உள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவர் 2 விக்கெட் மட்டும் தான் வீழ்த்தினார்.

ஆனால் மிக சிறப்பாக ரன்களை கட்டுபடுத்தினார். அதற்கு பயனாக முதல் முதலாக பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் பத்து இடத்துக்குள் வந்து விட்டார். தற்போது 7 வது இடத்தில் உள்ளார். ஜடேஜா 5 வது இடத்தில் இருந்து 6 வது இடத்துக்கு சென்றார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலி 2 வது இடத்துக்கு முன்னேறினார். 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்தது அவரது முன்னேற்றத்துக்கு காரணம் ஆகும். இந்திய கேப்டன் தோனி தனது 6 வது இடத்தை தக்க வைத்து கொண்டார். சுரேஷ் ரெய்னா 3 இடங்கள் முன்னேறி 15 வது இடத்துக்கு வந்தார். அணி தரவரிசையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் இணைந்து 2 வது இடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment